Friday, August 27, 2010
Saturday, August 7, 2010
படிப்புக்காக கற்பை ஏலம் விட்ட 'மாணவி'
ஹங்கேரி நாட்டை சேர்ந்த 18 வயது மாணவி மிஸ் ஸ்பிரிங். இவர் டாக்டருக்கு படிக்க விரும்பினார். அதன் படியே அவர் படிக்க “சீட்” கிடைத்தது. ஆனால் அதற்குரியபணத்தை அவரால் செலுத்த முடியவில்லை.
ஏனெனில் அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது. அவரது தாயார் வீட்டை விற்றும், பணம் கடன் பெற்றும் அதற்கான கட்டண தொகையை புரட்டினார். ஆனால் டாக்டர் படிப்புக்கான முழு தொகையையும் பெற முடியவில்லை. எனவே, மாணவி மிஸ் ஸ்பிரிங் ஒருவிபரீத முடிவை மேற்கொண்டார்.
தனது கற்பை அதாவது கன்னித்தன்மையை ஏலத்தில் விற்க முடிவு செய்தார். அதன்படி இமெயில் மூலம் ஆன்லைனில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதை அறிந்த பல ஆண்கள் ஏலத்தில் பங்கேற்றனர். அவர்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 2 நபர்கள் இவருக்கு தேவைப்படும் ரூ.1 1/2 கோடியை தருவதாக ஒப்புக்கொண்டனர். அவர்களில் இங்கிலாந்து பிரமுகரை மிஸ்ஸ்பிரிங் ஏற்றுக்கொண்டு தன் கற்பை அவரிடம் விற்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக, அந்த நபரை தேடி விரைவில் இங்கிலாந்து வர இருக்கிறார். இவரது இரக்ககுணம் தனக்கு பிடித்து இருந்ததாகவும் எனவே தான் இவரை தேர்ந்தெடுத்ததாகவும் மிஸ் ஸ்பிரிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறும் போது, என்னை இருவருமே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். என்னையும், எனது குடும்பத்தினரையும் நல்லபடியாக கவனித்துக் கொள்வதாக உறுதி அளிக்கின்றனர்.
ஆனால் அவர்களில் யாரை தேர்வு செய்வது என்று இதுவரை நான் முடிவு செய்யவில்லை என்றார்.
Friday, August 6, 2010
Thursday, July 22, 2010
Thursday, July 15, 2010
சென்சார் போர்டுக்கே அதிர்ச்சி கொடுத்த 'அந்தரங்கம்'
இது குறித்து படத்தின் இயக்குனர் ருக்மாங்கதன் கூறியதாவது: ஆண் பாலியல் தொழிலாளி கலாசாரம் வெளிநாட்டைச் சேர்ந்தது. ஆனால் அது சென்னை வரை வந்துவிட்டது என்பது கசப்பான உண்மை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இது பற்றி ‘தமிழ் முரசு நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. அப்போது உருவான கதைதான் இது. ஆண் பாலியல் தொழிலாளி எப்படி உருவாகிறார்கள், அவர்கள் வலையில் பெண்கள் எப்படி விழுகிறார்கள் என்பதுதான் கதை. பெண்கள் பாலியல் தொழிலில் விழுவதற்கு ஆண்கள் காரணமாக இருப்பதைப்போல ஆண்கள் இந்த தொழிலில் இறங்குவதற்கு பெண்கள் காரணமாக இருக்கிறார்கள். அதை பற்றி படத்தில் சொல்கிறேன். படுக்கையறை காட்சிகளை மட்டும் சென்சார் நீக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
கவர்ச்சி நடிகையின் குத்தாட்டத்தில் காணாமல் போன கன்னியாக்குமரி
இந்திரஜித் என்ற இசையமைப்பாளர் கி.மு., சாமிடா, தண்டாயுதபாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இவர் யார் வேண்டுமானாலும் கதையின் நாயகனாகி விடலாம் என்ற புதிய விதிப்படி திடீரென இவரே ஹீரோவாகி விட்டார். படத்தை இவரே இயக்கவும் செய்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் வினிதா.
இப்படத்தின் இறுதிக் கட்ட காட்சிகளை குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் எடுத்து வருகின்றனராம். மருங்கூர் என்ற இடத்தில் உள்ள ராமனாதிச்சம்புதூரில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினர்.
இதில் கவர்ச்சி நடிகை ரேவதி, கவர்ச்சி சொட்டச்சொட்ட ஆடிப் பாடிய குத்துப் பாட்டை படமாக்கினர். இந்தக் காட்சி படமாவது அறிந்து அக்கம் பக்கத்து கிராம மக்கள் ஓடோடி வந்து விட்டனர். நீச்சல்குளத்தை கவர்ச்சிக் களமாக்கி ஆடிக் கொண்டிருந்த ரேவதியையும், அவரது ஆட்டத்தையும் பார்த்து ரசித்தனர்.
'எந்திரன்' இருநூறு நாட்கள் ஓடும் - ஆருடம் கூறும் ரஜினி
இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டமாக ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள ‘எந்திரன்‘ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பெரும் பொருட்செலவில் இதுவரை இந்தியப்பட உலகில் யாரும் உருவாக்காத அளவுக்கு, படவுலகமே வியப்பின் உச்சிக்கே செல்லும் அளவுக்கு, மிகப்பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு, 2 ஆண்டுகளாக இடைவிடாமல் நடந்தது.
ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருந்த நிலையில் கடந்த 7 -ம் தேதி அந்த பாடலும் எடுத்து முடிக்கப்பட்டது. படப்பிடிப்பின் நிறைவு நாளில் சன் பிக்சர்ஸ் சார்பில் ரஜினி, ஷங்கர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு விருந்தளிக்கப்பட்டது. இதற்கு மறுநாள் ரஜினி சார்பில் படப்பிடிப்பு குழுவினருக்கு விருந்தளிக்கப்பட்டது. ரஜினிக்கு சொந்தமான கேளம்பாக்கம் பண்ணையில் நடந்த இந்த பார்ட்டியில் ரஜினி சக நடிகர்,நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் உற்சாகமாக இருந்தாராம். அப்போது ‘எந்திரன் இருநூறு நாட்கள் ஓடும் என்ற தனது ஆரூடத்தை சொல்லி ஷங்கரை ஆனந்தப்படுத்தினாராம்.
Wednesday, July 14, 2010
சினிமா படப்பிடிப்பில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு மூக்கு உடைந்தது
`தைரியம்` படத்தில் கதாநாயகனாக அறிமுகமான குமரன் இப்போது, `வருஷநாடு` என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை சூரியபிரகாஷ் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு, திண்டுக்கல் பகுதியில் நடைபெறுகிறது.
நகைச்சுவை நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சிங்கம்புலி, மயில்சாமி ஆகியோர் நடித்த காட்சி நேற்று படமாக்கப்பட்டது. காட்சியின்படி எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி ஒரு அணியாகவும், சிங்கமுத்து, மயில்சாமி இன்னொரு அணியாகவும் இருந்து, எதிர் எதிராக இரு அணியினரும் மோதிக் கொள்கிறார்கள்.
இரு தரப்பினரும் கற்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது போல் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. இந்த காட்சியில் நிஜமான கற்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது ஒரு கல், எம்.எஸ்.பாஸ்கரின் மூக்கில் பட்டு ரத்தம் கொட்டியது. அந்த வேதனையிலும் எம்.எஸ்.பாஸ்கர், ``ஏய், என் முக்கை உடைச்சிட்டான்...அடிடா...அடிடா`` என்று சத்தம் போட்டு வசனம் பேசி நடித்தார்.
காட்சி முடிந்ததும், அவர் மூக்கில் இருந்து ரத்தம் அதிகமாக வருவதை பார்த்த டைரக்டர் சூர்யபிரகாஷ் பதறிப்போனார். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு எம்.எஸ்.பாஸ்கர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
thatstamil இலங்கை தூதரகத்திடம் வாங்கிய காசு ?
"
வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
முன்னதாக இலங்கை தூதரகம் முன்பு அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
"
source :
http://thatstamil.oneindia.in/news/2010/07/14/chennai-srilanka-fishermen-vaiko-nedumaran-arrest.html
இன்று நடந்த போராட்டம் இலங்கை அரசை கண்டித்துதான்,இந்திய அரசையோ அல்லது மாநில அரசையோ கண்டித்து அல்ல.
மூன்று ஆயிரத்திற்கும் மேலான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு போராடினார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகையில், முதல் செய்தியாக அதுவும் வெறும் 50 பேர் மட்டும் கலந்து கொண்டார்கள் என்று ஏன் இவர்கள் தமிழ் உணர்வாளர்களின் உணர்வை கொச்சை படுத்தி , சிங்கள அரசிற்கு சாதகமான செய்தியை அதுவும் பொய் செய்தியை வெளியிடுகிறார்கள்?
அம்சா இருக்கும் பொது அனைத்து பத்திரிக்கையாளர்களிடமும் மிகவும் தனது கவனிப்பினால் ' அனுசரணை' யான செய்திகளை வெளியிட செய்தார்.
இப்போது கிருஷ்ணமூர்த்தியிடமும் thatstamil இல் வேலை பார்க்கும் பத்திரிக்கைகாரர் ஏதேனும் 'கவனிப்பை' பெற்றுவிட்டு இலங்கை அரசிற்கு சாதகமான செய்திகளை வெளியிடுகிறார்களா ? என்ற சந்தேஹம் வருகிறது.
இது இணைய அஞ்சலில் நமக்கு சுற்றரிக்கையாய் வந்த செய்தி அதை இங்கே வெளியிட்டுள்ளோம்
