Friday, August 27, 2010
Saturday, August 7, 2010
படிப்புக்காக கற்பை ஏலம் விட்ட 'மாணவி'
ஹங்கேரி நாட்டை சேர்ந்த 18 வயது மாணவி மிஸ் ஸ்பிரிங். இவர் டாக்டருக்கு படிக்க விரும்பினார். அதன் படியே அவர் படிக்க “சீட்” கிடைத்தது. ஆனால் அதற்குரியபணத்தை அவரால் செலுத்த முடியவில்லை.
ஏனெனில் அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது. அவரது தாயார் வீட்டை விற்றும், பணம் கடன் பெற்றும் அதற்கான கட்டண தொகையை புரட்டினார். ஆனால் டாக்டர் படிப்புக்கான முழு தொகையையும் பெற முடியவில்லை. எனவே, மாணவி மிஸ் ஸ்பிரிங் ஒருவிபரீத முடிவை மேற்கொண்டார்.
தனது கற்பை அதாவது கன்னித்தன்மையை ஏலத்தில் விற்க முடிவு செய்தார். அதன்படி இமெயில் மூலம் ஆன்லைனில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதை அறிந்த பல ஆண்கள் ஏலத்தில் பங்கேற்றனர். அவர்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 2 நபர்கள் இவருக்கு தேவைப்படும் ரூ.1 1/2 கோடியை தருவதாக ஒப்புக்கொண்டனர். அவர்களில் இங்கிலாந்து பிரமுகரை மிஸ்ஸ்பிரிங் ஏற்றுக்கொண்டு தன் கற்பை அவரிடம் விற்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக, அந்த நபரை தேடி விரைவில் இங்கிலாந்து வர இருக்கிறார். இவரது இரக்ககுணம் தனக்கு பிடித்து இருந்ததாகவும் எனவே தான் இவரை தேர்ந்தெடுத்ததாகவும் மிஸ் ஸ்பிரிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறும் போது, என்னை இருவருமே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். என்னையும், எனது குடும்பத்தினரையும் நல்லபடியாக கவனித்துக் கொள்வதாக உறுதி அளிக்கின்றனர்.
ஆனால் அவர்களில் யாரை தேர்வு செய்வது என்று இதுவரை நான் முடிவு செய்யவில்லை என்றார்.